சிட்னியில் 8 மாத கர்ப்பிணி இந்தியப் பெண் கார் விபத்தில் பலி ... BMW ஓட்டிய 19 வயது இளைஞர் கைது!

 
sidney
 

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடந்த கொடூர விபத்தில், இன்னும் சில வாரங்களில் இரண்டாவது குழந்தையைப் பெறவிருந்த 33 வயது சமன்விதா தாரேஷ்வர் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு, ஹார்ன்ஸ்பி பகுதியிலுள்ள ஜார்ஜ் தெருவில் தனது கணவர் மற்றும் 3 வயது மகனுடன் நடந்து சென்றபோது இந்த விபத்து நேர்ந்தது.

பாதையைக் கடக்க முற்பட்ட தாரேஷ்வர் குடும்பத்திற்கு வழி விட கியா கார்னவல் கார் வேகத்தை குறைத்தது. அது நடந்த சில விநாடிகளிலேயே, பின்னால் வந்த பிஎம்டபிள்யூ கடுமையாக மோதியது. மோதலின் தாக்கத்தால் முன்னாள் கியா கார் தாரேஷ்வர் மீது ஏறி மோதியதில், அவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக தாரேஷ்வரும், அவரது வயிற்றிலிருந்த குழந்தையும் உயிரிழந்தனர்.

பிஎம்டபிள்யூஐ ஓட்டியவர், தற்காலிக லைசென்ஸ் கொண்ட 19 வயதான ஆரன் பாப்பசோக்லு என போலீஸ் தெரிவித்துள்ளது. கியா மற்றும் பிஎம்டபிள்யூ ஓட்டுநர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. தாரேஷ்வரின் கணவர், குழந்தைக்கு காயம் ஏற்பட்டதா என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

ஐடி துறையில் பயிற்சி பெற்ற தாரேஷ்வர், ஆல்ஸ்கோ யூனிஃபார்ம்ஸ் நிறுவனத்தில் டெஸ்ட் அனலிஸ்டாக வேலை செய்து வந்தார். அவரை கொன்ற விபத்துக்குப் பொறுப்பான ஆரன், பின்னர் அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார். அபாயகரமான ஓட்டுதலால் மரணம் விளைவித்தல், கவனக்குறைவால் மரணம் விளைவித்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, கர்ப்பிணிப் பெண்களைச் சார்ந்த விபத்துகளுக்கு கூடுதல் தண்டனை அளிக்கும் வகையில் 2022ஆம் ஆண்டு அமலில் வந்த ‘ஜோவின் சட்டம்’ (Zoe’s Law) கீழ் விசாரிக்கப்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இந்தச் சட்டப்படி, வயிற்றில் உள்ள குழந்தை இழந்தால், அடிப்படை தண்டனைக்கு மேலாக மேலும் மூன்று ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!