தமிழகத்தில் அடுத்த அதிர்ச்சி... 8 மாத கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை!

தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் அருகே 8 மாத கர்ப்பிணி பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்தது தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார். தூத்துக்குடி மாவட்டம், மெஞ்ஞானபுரம் அருகேயுள்ள அத்திமரப்பெட்டி வேத கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகேசன். இவருக்கு 5 மகன்கள், 2 மகள்கள். இதில் மூத்த மகளான ரேவதி புஷ்பத்திற்கும் (30), மெஞ்ஞானபுரம் அருகே உள்ள திருராமநல்லூரை சேர்ந்த செம்புலிங்கம் என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 ½ வயதில் சுபிக்ஷா என்ற பெண் குழந்தை உள்ளது.
தற்போது அவர் 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில், அவரது தம்பி நாகார்ஜூன் (18) திருராமநல்லூரில் இவரது வீட்டில் தங்கியிருந்து திருச்செந்தூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறாா். இந்த நிலையில் அக்காள், தம்பி இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சினை ஏற்பட்டு, இருவரும் பேசாமல் இருந்து வந்தனராம். தம்பி தன்னுடன் பேசாமல் இருந்ததால் அவர் மனமுடைந்து காணப்பட்டாராம்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் மெஞ்ஞானபுரம் போலீசாார் சம்பவ வீட்டிற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து அந்த போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவருக்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகளே ஆவதால், கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!