தமிழகத்தில் புதிதாக 8 மாவட்டங்கள்... சட்டப்பேரவையில் அமைச்சர் தகவல்!

 
புதிய மாவட்டம்

தமிழகத்தில் புதிதாக 8 மாவட்டங்கள் அமைக்கப்பட்ட வேண்டுமென சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்து வருவதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்தார். தமிழக சட்டசபையில் தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடர் நடைப்பெற்று வருகிறது. இன்று பொதுப் பணித் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. கோரிக்கைகளின் மீதான விவாதத்திற்கு முன்பு நடைபெற்ற கேள்வி நேரத்தில், ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன் கோரிக்கை வைத்திருந்தார். 
செம!! இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம்!!மத்திய அரசு பெருமிதம்!!
அதே போல் அரசு கொறடா கோவி செழியன் டெல்டா மக்களின் மனம் குளிர கும்பகோணம்  தனி மாவட்டமாக அமைக்கப்பட வேண்டும் வலியுறுத்தியிருந்தார். இதற்கு பதிலளித்து பேசிய  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தமிழகத்தில் புதிதாக 8 மாவட்டங்களை உருவாக்குவதற்கு சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.
மாவட்டம்
8 மாவட்டங்களை பிரிப்பதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும், இது தொடர்பான கோரிக்கை முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு நிதிநிலைக்கு ஏற்ப முதல்வர் முடிவெடுப்பார் என்றும் சட்டப்பேரவையில் தெரிவித்தார். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web