பெரும் சோகம்... ஆட்டோ மீது மினிவேன் மோதி 8 பேர் உடல் நசுங்கி பலி...!

 
விபத்து

 
குஜராத் மாநிலத்தில்  அகமதாபாத்திலிருந்து மினி வேன்  மகாராஷ்டிராவிற்கு  சென்று கொண்டிருந்தது. புனே மாவட்டத்தில் உள்ள ஜோகாவின் அருகே  மினிவேன் சென்று கொண்டிருந்த போது, திடீரென  கட்டுப்பாட்டை இழந்தது. இதனால்  எதிரே வந்து கொண்டிருந்த ஆட்டோ மீது பயங்கர வேகத்தில் மோதியது. இதனால் கோர விபத்து ஏற்பட்டது.  

விபத்து
இந்த கோர விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த  7 பேர், மினி வேன் ஓட்டுநர் என மொத்தம் 8 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆம்புலன்ஸ்

இந்த விபத்து குறித்து வாகன ஓட்டிகள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதன் பேரில்   சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உயிரிழந்தவர்களின்  உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து , வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.  

மார்கழி மாத குளிர்... சளி, இருமலை விரட்ட இதைச் செய்தாலே போதும்!

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!