5 நாட்களுக்கு 8 ரயில்கள் ரத்து... உங்க பயணத்தை திட்டமிட்டுக்கோங்க...!

 
ரயில் ரயில்வே

தமிழகத்தில் டிசம்பர் 17 , 18ம்தேதிகளில் தென்மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை பெய்தது. கடந்த 150 ஆண்டுகளில் இல்லாத அளவு பெருமழையால் குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டது. பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. பாதிக்கப்பட்ட மக்கள் தன்னார்வலர்கள், அரசு அலுவலர்கள், தேசிய பேரிடர் மீட்பு படையினரால் மீட்கப்பட்டனர்.

ரயில் பயணிகள் கவனத்திற்கு.. இன்று இந்த ரயில்கள் ரத்து!!..

நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்பட்டன. பேருந்து, ரயில், விமானப் போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டது. படிப்படியாக இயல்பு நிலை திரும்பீ வரும் நிலையில்  நெல்லை – திருச்செந்தூர் இடையேயான ரயில் சேவை 5 நாட்களுக்கு ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.  

ரயில்

இதனையடுத்து  நெல்லை – திருச்செந்தூர் இடையே 8 முன்பதிவு இல்லாத ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக   தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. செய்துங்கநல்லூர் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையங்கள் இடையே ரயில் பாதை பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட இருப்பதாக இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.  

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web