8 வயது சிறுமி மூளைச் சாவு... 7 பேருக்கு உறுப்புகள் தானம் செய்து உயிர்கள் காப்பாற்றிய பெற்றோர்!
கோவையை சேர்ந்த சந்தோஷின் 8 வயது மகள் வெண்பா கடந்த 23.02.2026 அன்று திடீரென மயங்கினார். இரத்த அழுத்தம் அதிகரித்து மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டது. உடனே அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் கோவையில் உள்ள கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.

மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் 25.02.2026 அன்று சிறுமிக்கு மூளைச் சாவு ஏற்பட்டது. துயரத்தில் இருந்த பெற்றோர் பெரிய மனதுடன் உறுப்புத் தானம் செய்ய முடிவு செய்தனர். தமிழ்நாடு உறுப்பு தான ஆணையம் அனுமதியுடன் கல்லீரல், சிறுநீரகங்கள், கண்கள், எலும்பு மற்றும் தோல் தானமாக பெறப்பட்டது. மருத்துவ விதிமுறைகளின்படி அனைத்து செயல்முறைகளும் மேற்கொள்ளப்பட்டது.

கல்லீரல் மற்றும் ஒரு சிறுநீரகம் கே.எம்.சி.ஹெச் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. மற்றொரு சிறுநீரகம், கண்கள், எலும்பு மற்றும் தோல் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. மருத்துவர்கள் தகுந்த நேரத்தில் உறுப்புகளை மாற்று அறுவைச் சிகிச்சைக்காக தயாராக்கினர். மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்ல ஜி பழனிசாமி, உறுப்புத் தானம் பல உயிர்களை காப்பாற்றும் என கூறி குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்தார். இந்த மனிதநேய செயல் சமூகத்தில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
