80 ஆண்டுகால மௌனம்... பொங்கல் கொண்டாடாத 'செம்பராயனேந்தல்' கிராமம் - இன்றும் தொடரும் விசித்திர மரபு!

 
பொங்கல் கொண்டாடாத செம்பராயனேந்தல் கிராமம்

தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை உலகெங்கும் உள்ள தமிழர்கள் உற்சாகமாகக் கொண்டாடினாலும், சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே உள்ள செம்பராயனேந்தல் கிராம மக்கள் மட்டும் எந்தவித கொண்டாட்டமும் இன்றி அமைதியாகப் பொழுதைக் கழிக்கின்றனர்.

வைகை ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள இந்தச் செழிப்பான கிராமத்தில் சுமார் 75 வீடுகள் உள்ளன. இவர்கள் பொங்கல் கொண்டாடாததற்குக் பின்னால் ஒரு அச்சமூட்டும் காரணம் உள்ளது: சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பு, கிராம மக்கள் அனைவரும் தங்கள் வீட்டு வாசல்களில் புதுப்பானை வைத்துப் பொங்கல் வைத்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாகக் கிராமத்தில் உள்ள வீடுகள் அனைத்தும் தீப்பற்றி எரிந்து நாசமாகியுள்ளன. இந்தத் துயரம் அடுத்தடுத்த ஆண்டுகளிலும் தொடர்ந்ததால், "பொங்கல் வைப்பதே விபத்திற்குக் காரணம்" என்று மக்கள் அஞ்சத் தொடங்கினர்.

பொங்கல்

அன்றிலிருந்து இன்று வரை இக்கிராம மக்கள் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவதை நிறுத்திவிட்டனர். இந்த ஊரைச் சேர்ந்தவர்கள் பிழைப்புக்காக வேறு ஊர்களுக்குச் சென்றாலும், அங்கேயும் பொங்கல் வைப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று தமிழகமே விழாக்கோலம் பூண்டுள்ள நிலையில், செம்பராயனேந்தல் கிராமத்தில் மட்டும்: வீடுகளுக்குச் சுண்ணாம்பு பூசுவதோ, வண்ணம் தீட்டுவதோ இல்லை. புதுப்பானை வைத்துப் பொங்கலிடுவது கிடையாது. வெளியூரிலிருந்து இங்குத் திருமணமாகி வரும் பெண்கள், தங்கள் பிறந்த வீட்டிலிருந்து கொண்டு வரும் பொங்கல் சீர் வரிசைகளைக் கூடப் பயன்படுத்துவதில்லை.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!