தினமும் 800 புஷ்-அப்ஸ் ... க்ளென் பிலிப்ஸ் அசத்தல் வீடியோ!

 
க்ளென் பிலிப்ஸ்


 
சாம்பியன்ஸ் டிராபியின் முதல் போட்டியில் நேற்று நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதின.  இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் க்ளென் பிலிப்ஸ் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். ஃபீல்டிங்கில் ரிஸ்வானின் கடினமான கேட்ச்சை பிடித்து அசத்தினார்.

இந்த கேட்ச் பிடித்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிலிப்சுக்கு வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன. 
உடலை கட்டுக்கோப்பாக வைப்பதில் ஆர்வமுடைய க்ளென் பிலிப்ஸ் ஒரு நாளைக்கு 800 புஷ்-அப்ஸ் எடுப்பாரென நியூசிலாந்தின் முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான சைமன் டவுல் கூறியிருந்தார்.  இவரது பேச்சு  சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பேட்டிங், ஃபீல்டிங், கேட்ச் என மூன்றிலும் க்ளென் பிலிப்ஸ் அசத்தலாக விளையாடி சாதனை படைத்துள்ளார்.  

இந்தப் போட்டியில் சதமடித்த டாம் லாதம் ஆட்ட நாயகன் விருது பெற்றார். ஆனால், க்ளென் பிலிப்ஸ் மக்களின் இதயத்தை வென்று விட்டார் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web