பக்ரீத் பண்டிகை... விடுமுறை கொண்டாட்டம்... இன்று தமிழகம் முழுவதும் 800 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

 
சிறப்பு பேருந்து

நாளை ஜூன் 29ம் தேதி பக்ரீத் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக இன்று தமிழக அரசு சார்பில் சென்னையில் இருந்து 800 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசு போக்குவரத்து கழகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்  சாதாரணமாகவே வார விடுமுறை நாட்களில் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகம்.

அரசு பேருந்து

அதிலும் பண்டிகைகள் திருவிழாக்கள் என்றால் கேட்கவேவேண்டாம். 2 மாதங்களுக்கு முன்பிருந்தே ரயில் , பேருந்துகளில் முன்பதிவு செய்து காத்து கிடப்பர். அந்தவகையில் நாளை ஜூன் 29ம் தேதி வியாழக்கிழமையாக இருப்பதால்  நீண்ட வார விடுமுறையை ஒட்டி சொந்த ஊர் செல்ல திட்டமிட்டுள்ளனர். இதனால்  சென்னை, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களில் இருந்து  வெளியூர் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.  

அரசுப் பேருந்து

இன்று ஜூன் 28ம் தேதி புதன்கிழமை  மாலை முதலே மக்கள் அதிகம் வெளியூர் செல்லத் தொடங்குவர். எனவே, அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில், தென் மாவட்டங்களுக்கு, 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். மற்ற, போக்குவரத்து கழகங்களில் தேவைக்கு ஏற்ப, கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

From around the web