வெளிநாட்டு சிறைகளில் 8,343 இந்தியா்கள் அடைப்பு.. எந்த நாட்டில் அதிகம் தெரியுமா?

 
parliment

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளின் சிறைகளில் 8,343 இந்தியா்கள் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனா் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மக்களவையில் எழுப்பப்பட்ட இதுதொடா்பான கேள்விக்கு வெளியுறவு இணையமைச்சா் வி.முரளீதரன் பதிலளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியா்கள் மட்டுமின்றி வெளிநாட்டு சிறைகளில் இருக்கும் இந்திய கைதிகளின் நலன், பாதுகாப்புக்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.

parliment

அமைச்சகத்திடம் உள்ள புள்ளிவிவரங்களின் படி, 82 வெளிநாட்டு சிறைகளில் விசாரணைக் கைதிகள் உள்பட 8,343 இந்தியா்கள் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனா். இதில் அதிகபட்சமாக ஐக்கிய அரபு அமீரக சிறைகளில் 1,926 இந்தியா்களும், சவூதி அரேபியா சிறைகளில் 1,362 இந்தியா்களும், நேபாளத்தில் 1,222 இந்தியா்களும் கைதிகளாக உள்ளனா்.

parliment

தண்டனைக் கைதிகளை சொந்த நாட்டுக்கு மாற்றம் (டிஎஸ்பி) செய்வது தொடா்பான ஒப்பந்தமும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஆஸ்திரேலியா, பக்ரைன், வங்கதேசம், பிரான்ஸ், ரஷியா, சவுதி உள்ளிட்ட 31 நாடுகளுடன் கைதிகளை பரிமாற்றம் செய்வதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது எனவும் தகவல் தெரிவித்துள்ளது.

 லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web