ஐதராபாத் 8வது நிஜாம் காலமானார்!! பிரபலங்கள் இரங்கல்!!

 
நிஜாம் மீர் முகரம் ஜா

ஐதராபாத்தின்  8வது நிஜாம் மீர் முகரம் ஜா. இவருக்கு வயது 86. இவர் வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைபாடு காரணமாக துருக்கியில் உள்ள இஸ்தான்புல்லில் கடந்த சனிக்கிழமை  காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது உடலில் இன்று ஐதராபாத்துக்கு கொண்டு வரப்பட்டு அவரது மூதாதையர் அடக்கம் செய்யப்பட்ட அதே இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது. 

நிஜாம் மீர் முகரம் ஜா
ஏற்கனவே 7 நிஜாம்களின் கல்லறைகள் சார்மினார் அருகே உள்ள அரச கல்லறையில் அமைந்துள்ளது. இதன் அடிப்படையில்  முகரம் ஜா உடலும் அதே இடத்தில் அடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 1967 முதல் முகரம் ஜா தனது தாத்தாவின் மறைவிற்கு பிறகு ஐதராபாத்தின் 8வது நிஜாம் ஆனார். டேராடூனில் பள்ளிப் படிப்பிற்குப் பிறகு, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மற்றும் ராயல் மிலிட்டரி அகாடமியில் படித்தவர்.

rip

முகரம் ஜா ஐந்து பேரை திருமணம் செய்து கொண்டார். 1980 வரை இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் இவர் தான். ஆனால் 1990ல் தனது மனைவியை விவாகரத்து செய்த போது இவருடைய பணம் குறையத் தொடங்கியது. தற்போது இவருடைய சொத்து மதிப்பு ரூ8000 கோடி தான்.  இவருடைய இறப்பிற்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!

From around the web