8ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை!! தாய்க்கு பயந்து சிறுமியின் விபரீத முடிவு!!

 
ஷர்மி

பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே மன அழுத்தத்தள் அதிகரித்து வருகின்றன. இதனை களைய பள்ளி, கல்லூரிகளில் நல்லொழுக்க மற்றும் போதனை வகுப்புக்கள் நடத்தப்படுகின்றன. இருந்த போதிலும் மாணவ, மாணவிகளின் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் சென்னை மதுரவாயல், சீமாத்தம்மன் நகரில் வசித்து வருபவர்  37 வயதான முருகன்.இவர் கூலித்தொழில் செய்து வருகிறார்.  இவரது மனைவி 32 வயது புனிதா .இவரும்  ஒரு  தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

சிறுவன் பலி

இவர்களுக்கு 12 வயதில் சர்மி  என்ற மகளும்,  6வயதில் கமலேஷ்  என்ற மகனும் உள்ளனர். சர்மி 8ம் வகுப்பும், கமலேஷ் 2ம் வகுப்பும் படித்து வருகின்றனர். பள்ளியில் தேர்வு எழுதி விட்டு வீட்டுக்கு வந்த சர்மி, தனது தந்தைக்கு போன் செய்து, ‘தம்பி சரியாக படிக்கவில்லை. அவனை நான் அடித்து விட்டேன்’ எனக் கூறியுள்ளார். பணிமுடிந்து  இரவு முருகன் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டில் உள்ள அறையில் மகள் சர்மி புடவையால் தூக்குப்போட்டு தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

போலீஸ்
அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சர்மியை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சர்மி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் காவல்துறையினர்  சர்மியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
தனது தம்பியை அடித்ததால், தனது தாயார் வந்து தன்னை அடிப்பாரோ என்ற பயத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருக்கலாம் என  காவல்துறையினர் முதல் கட்ட தகவலை வெளியிட்டுள்ளனர்.இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து மேலும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தாயார் அடிப்பாரோ என்ற பயத்தில் மாணவி தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!