பள்ளிகளில் தொடரும் வன்முறை... 10ம் வகுப்பு மாணவனை குத்தி கொலை செய்த 8ம் வகுப்பு மாணவன்!
அகமதாபாத்தில் செவன்த்-டே அட்வென்டிஸ்ட் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு மாணவன் நயனை , 8ஆம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்துக்குப் பிறகு பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பள்ளி முன் போராட்டத்தில் ஈடுபட்டு, அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் நடந்தது. பள்ளி மணியை அடித்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த நயன், வராண்டாவில் 8ம் வகுப்பு மாணவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதன்பின் அந்த மாணவன் மறைத்து வைத்திருந்த கத்தியால் நயனை வயிற்றில் குத்தி தப்பி ஓடிவிட்டார். நயன் உடனே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

போலீசார் சம்பவ இடத்தில் வந்த பின்னர், நயனை தாக்கிய மாணவரை கைது செய்து கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர். பள்ளியின் CCTV காட்சிகள் மற்றும் சம்பவத்தில் இருந்த மற்ற மாணவர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன. கேரளா கல்வி அமைச்சர் பிரபுல்பாய் பன்சேரியா நயனின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள் அமைதியைக் காக்க வேண்டுகோள் விடுத்துள்ளார், அத்துடன் விரைவில் நீதி நிலைநாட்டப்படும் எனவும் உறுதி அளித்துள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
