ரிப்பன் வெட்டி, 8 வயது சிறுமி திறந்து வைத்த காவல் நிலையம்!

உத்தரபிரதேச மாநிலத்தில், புதிதாக கட்டப்பட்டுள்ள காவல் நிலையத்தை, 8 வயது சிறுமி ஒருவர், ரிப்பன் வெட்டி திறந்து வைத்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் சம்பல் மாவட்டம் கோட் கார்வி பகுதியில் இஸ்லாமியர் வழிபட்டு வந்த மசூதி ஒன்றில் தொல்லியல் ஆய்வு நடத்த கடந்தாண்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவைத் தொடர்ந்து கடந்த ஆண்டு நவம்பர் 24ம் தேதி போலீசார் உதவியுடன் அதிகாரிகள் மசூதியில் ஆய்வு நடந்த சென்றனர்.
இந்த ஆய்வுக்கு அந்த பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய மதத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது வெடித்த வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வன்முறை சம்பவத்தை தொடர்ந்து மசூதி அமைந்துள்ள பகுதியில் பாதுகாப்பை அதிகரிக்க புதிதாக காவல் நிலையம் ஒன்றைக் கட்ட காவல் துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி மசூதிக்கு எதிரே காவல் நிலையம் ஒன்று புதிதாக கட்டப்பட்டது.
இந்நிலையில் புதிதாக கட்டப்பட்ட காவல் நிலையம் இன்று திறப்பு விழாவுக்கு தயாரான நிலையில், அப்பகுதியை சேர்ந்த கன்கன் கஷ்யப் என்ற 8 வயது சிறுமி ரிப்பன் வெட்டி காவல் நிலையத்தைத் திறந்து வைத்தார். திறப்பு விழாவில் மாவட்ட எஸ்.பி. உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!