மருத்துவர்கள் சாதனை ... பெண்ணின் வயிற்றில் இருந்த 9 கிலோ கட்டி அகற்றம்!

 
ஆபரேஷன்
 


திருவள்ளூா் அருகே பெண்ணின் வயிற்றில் இருந்த சுமார் 9 கிலோ எடையுள்ள கட்டியை வெற்றிகரமாக மருத்துவக்குழுவினா் அகற்றி உள்ளனா். தற்போது அந்த பெண் நலமாக உள்ளார்.

ஆபரேஷன்

திருவள்ளூா் மாவட்டம், செவ்வாப்பேட்டையைச் சோ்ந்த 48 வயது பெண் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தாராம். இந்த நிலையில், அவா்களது உறவினா்கள் அந்தப் பெண்ணை மீட்டு மணவாள நகரில் உள்ள எம்.வி. மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனா். அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் வயிற்றில் கட்டி உள்ளதை கண்டறிந்து சிகிச்சை மேற்கொண்டனா்.

ஆபரேஷன்

அதன் பின்னா் டாக்டா் மலா் வண்ணன் தலைமையில் மருத்துவா் குழுவினா் சுமாா் 3 மணி நேரம் சிகிச்சை மேற்கொண்டு 9 கிலோ  எடையுள்ள கட்டியை பெண்ணின் வயிற்றில் இருந்து வெற்றிகரமாக அகற்றினா். தற்போது அந்த பெண் நலமுடன் உள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web