அதிர்ச்சி!! கால்பந்து மைதானத்தில் நெரிசலில் சிக்கி 9 பேர் பலி!!

 
கால்பந்து

மத்திய அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு எல் சல்வடோர். இந்நாட்டில் சல்வடோர் லீக் என்ற பெயரில் கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கால்பந்து தொடரில் நேற்று காலிறுதி சுற்று போட்டி நேற்று நடைபெறவிருந்தது.

கால்பந்து

இதில், அலியன்சா - எப்ஏஎஸ் மோதவிருந்தனஅந்நாட்டின் கஸ்கட்லன் நகரில் உள்ள மைதானத்தில் போட்டி நடைபெறவிருந்த நிலையில் போட்டியை காண மைதானத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர். மைதானத்திற்குள் செல்ல ரசிகர்கள் வேகவேகமாக நுழைவாயிலில் திரண்டனர். அப்போது ஒரு நுழைவாயிலில் கூட்ட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

கால்பந்து

இதில், பலர் கீழே விழுந்தனர். அவர்கள் மீது சக ரசிகர்கள் ஏறி நடந்து சென்றனர். இந்த கூட்ட நெரிசலில் பலரும் சிக்கிக் கொண்டதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே மூச்சு திணறி பலியாகினர். கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழந்த நிலையில் கால்பந்து போட்டி ரத்து செய்யப்பட்டது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web