கோர விபத்தில் 9 பேர் பலி! பிரதமர் ரூ.2 லட்சம் நிவாரண நிதி அறிவிப்பு!

 
சொகுசு பேருந்து விபத்து

குஜராத் மாநிலத்தில், நேற்று நடந்த கோர விபத்தில் பலியான 9 பேரின் உறவினர்களுக்கு பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம்  நிவாரண தொகையாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படுவதாக அறிவித்துள்ளார். நேற்று குஜராத் நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த சொகுசு பேருந்தும், காரும் மோதிக் கொண்டதில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படு காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளது. குஜராத் மாநிலம் நவ்சாரி மாவட்டம் வெஸ்மா கிராமம் அருகே ஆமதாபாத் - மும்பை நெடுஞ்சாலையில் சொகுசு பேருந்து ஒன்று வல்சாத் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்திசையில் இருந்து வந்த கார் திடீரென நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது.

மோடி

இந்த சம்பவத்தில் கார் முற்றிலும் உருக்குலைந்து போயுள்ளது. பேருந்தின் முன்பக்கம் சேதமடைந்து உள்ளது. விபத்தில் சிக்கியதில் 9 பேர் உயிரிழந்து உள்ளனர். ஒருவர் காயமடைந்து உள்ளார். விபத்து நடந்தவுடன் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து நவ்சாரி மாவட்ட துணை போலீஸ் சூப்பிரெண்டு வி.என். பட்டேல் கூறுகையில், விபத்தில் பேருந்து மற்றும் கார் சிக்கி கொண்டதில் 9 பேர் பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்து உள்ளனர். பலத்த காயமடைந்த நபர் சூரத் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளார் என கூறியுள்ளார். இந்த விபத்திற்கான காரணம் பற்றி உடனடியாக எதுவும் தெரிய வரவில்லை. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இந்த விபத்து குறித்து தகவலறிந்த பிரதமர் மோடி, இரங்கல் தெரிவித்து, உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படுவதாக அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘நவ்சாரியில் சாலை விபத்தில் உயிர்களை இழந்தது வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுடன் என் எண்ணங்கள் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என நம்புகிறேன். உதவித் தொகையாக பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ரூ.2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் வழங்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web