9 ம் வகுப்பு மாணவன் 88 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம்... சீரழியும் இளைய தலைமுறை!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே நடந்த ஒரு கொடூரச் சம்பவம், ஒட்டுமொத்தத் தமிழகத்தையே தலைகுனிய வைத்துள்ளது. வீட்டில் தனியாக இருந்த 88 வயது மூதாட்டி ஒருவரை, அதே பகுதியைச் சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் ஒருவன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். அந்த மூதாட்டியின் வாயில் துணியை வைத்து அடைத்து, கொடூரமாகத் தாக்கி இந்த வெறிச்செயலில் அவன் ஈடுபட்டுள்ளது ஊர் மக்களையே அதிர வைத்துள்ளது.
பாதிக்கப்பட்ட மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த உறவினர்கள், அவரது நிலையைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர். இதுகுறித்து உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார், அந்தப் பள்ளி மாணவனைத் தேடிச் சென்று அதிரடியாகக் கைது செய்தனர். "பேத்தி வயதுக் குழந்தைகளுடன் விளையாட வேண்டிய வயதில், ஒரு பாட்டிக்கு இப்படி ஒரு கொடுமையையா செய்வது?" என்று அந்தப் பகுதி மக்கள் ஆத்திரத்தில் கொதிக்கின்றனர்.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள அந்த மாணவனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவர்கள் மத்தியில் பெருகிவரும் இத்தகைய வன்முறை எண்ணங்கள் மற்றும் இணையதளத் தாக்கங்கள் குறித்துச் சமூக ஆர்வலர்கள் பெரும் கவலை தெரிவித்துள்ளனர். "வளரிளம் பருவத்திலேயே இவ்வளவு கொடூரமான எண்ணங்கள் வரக் காரணம் என்ன?" என்கிற விவாதமும் எழுந்துள்ளது. இந்தச் சம்பவம் நாகர்கோவில் பகுதியில் பெரும் பரபரப்பையும், பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
