உணவுக்காக கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் பலி! 300க்கும் அதிகமானோர் காயம்! நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் 2 பேர் கைது!

 
கூட்டம் கலவரம் நெரிசல் ஏமன்

இலவச உணவு மற்றும் நிதியுதவிக்காக திரண்ட கூட்டத்தில், நெரிசலில் சிக்கி 90 பேர் பலியான விபத்தில், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உலகை உலுக்கும் பெரும் அதிர்ச்சியாக ஏமன் நாட்டின் ரம்ஜான் பண்டிகையையொட்டி, வழங்கப்பட்ட நிதியுதவி, மற்றும் இலவச உணவைப் பெறுவதற்காக கூடியிருந்த கூட்டத்தில், நெரிசலில் சிக்கி 90 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த கூட்ட நெரிசலில் சிக்கி, சுமார் 300க்கும் அதிகமானோர்கள் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


ஏமான் நாட்டின் தலைநகர் சனாவில் ரம்ஜான் பண்டிகையையொட்டி ஏழை மக்களுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், நிதியுதவியுடன் இலவச உணவு வகைகளும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்த உணவைப் பெறுவதற்காக நீண்ட வரிசையில் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடியிருந்தனர்.

இந்நிலையில், கூட்டத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக ஒருவரையொருவர் முண்டியடித்த நிலையில், திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அனைவரும் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடிய நிலையில், பலரும் கூட்டத்தில் சிக்கி, பலரும் மிதித்து ஓடியதால், 300க்கும் அதிகமானவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. உணவுக்காக இப்படி பலரும் உயிரிழந்திருப்பது உலக நாடுகளை உலுக்க செய்துள்ளது. 

கூட்ட நெரிசல் செருப்பு

ரம்ஜான் பண்டிகையையொட்டி ஒவ்வொரு வருடமும் இப்படியான நிதியுதவி, இலவச உணவு வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றாலும், நேற்று நடந்த இந்த நிகழ்வு சரியாக திட்டமிடப்படாமல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அவசர கால வெளியேறும் வழி, காற்று வசதி ஆகிய எதைப் பற்றியும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கவனத்தில் கொள்ளவில்லை. இது தான் விபத்து நடைப்பெற்றதற்கான காரணம் என்று அந்நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர். யாருக்கும் வரிசையில் அனுமதிக்கவோ, டோக்கன் முறைகளோ பின்பற்றப்படவில்லை. முண்டியடித்து முதலில் வருபவர்களுக்கு  உதவி என்கிற வகையில் வரிசையை ஒழுங்கப்படுத்தவும் யாரும் இல்லாதது இந்த அசம்பாவிதத்துக்கு காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் 2 பேரைக் கைது செய்துள்ளனர். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web