90% மானியத்தில் வீடு, ஓய்வூதியச் சலுகைகள்... தூய்மை பணியாளர்களுக்கு ஜாக்பாட்!!
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் தற்காலிகமாகப் பணிபுரியும் தூய்மை பணியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நலவாரியம் பல்வேறு அதிரடிச் சலுகைகளை அறிவித்துள்ளது. இந்தச் சலுகைகளைப் பெற தூய்மை பணியாளர்கள் மற்றும் பல்நோக்கு பணியாளர்கள் உடனடியாக நலவாரியத்தில் உறுப்பினராகப் பதிவு செய்ய வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

தூய்மை பணியாளர்களுக்கான முக்கிய நலத்திட்டங்கள்:
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் ஒதுக்கீடு செய்யப்படும் வீடுகளுக்கு 90 சதவீத மானியம் வழங்கப்படும். 60 வயது பூர்த்தியடைந்த தூய்மை பணியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 ஓய்வூதியம் வழங்கப்படும். பணியிடத்தில் விபத்தினால் மரணம் ஏற்பட்டால் ரூ. 5 லட்சம் உதவித்தொகையும், உடல் உறுப்புகளை இழந்தால் பாதிப்பைப் பொறுத்து ரூ.1 லட்சம் வரையிலும் நிதியுதவி வழங்கப்படும். வாரிசுகளின் கல்விக்காக ரூ. 1,000 முதல் ரூ. 8,000 வரை உதவித்தொகை.
திருமண உதவித்தொகையாக ரூ. 5,000 வழங்கப்படும். தூய்மை பணியாளர்கள் அல்லது அவர்களின் குடும்பத்தைச் சார்ந்த பெண்களுக்கு மகப்பேறு கால நிதியுதவியாக ரூ.6,000 வழங்கப்படும். இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு செலவுகளுக்காக ரூ. 25,000 நிதியுதவி வழங்கப்படும்.

யாரெல்லாம் பதிவு செய்யலாம்?
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்சாலைகள், நகராட்சி மற்றும் ஊராட்சிகளில் பணிபுரியும் தற்காலிகத் தூய்மை பணியாளர்கள் மற்றும் பல்நோக்கு பணியாளர்கள் இதில் உறுப்பினராகலாம். 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் ஏற்கனவே நிரந்தர அரசுப் பணியில் உள்ள தூய்மை பணியாளர்கள் இதில் பதிவு செய்ய இயலாது.
விண்ணப்பிக்கும் முறை:
இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தற்காலிகப் பணியாளர்களைப் பணியமர்த்தும் ஒப்பந்த நிறுவனங்கள், உடனடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் 4-வது மாடியில் உள்ள தாட்கோ (TAHDCO) அலுவலகத்தை அணுகி விண்ணப்பங்களைப் பெற்றுப் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தொடர்புக்கு: மாவட்ட மேலாளர், தாட்கோ, இராணிப்பேட்டை, தொலைபேசி எண்கள்: 7448828512 / 8778489724
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
