கொடூரம்: தேர்தல் வாக்குறுதிக்காக 900 தெருநாய்கள் படுகொலை!

 
தெருநாய் நாய் ரேபிஸ்

தெலங்கானா மாவட்டத்தில், கிராமங்களில் நாய் தொல்லையை ஒழிப்பதாகக் கூறி, சட்டவிரோதமான முறையில் வாயில்லா ஜீவன்களைக் கொன்று குவித்து வருவது விலங்கு நல ஆர்வலர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம், ஜெக்தியால் மாவட்டம் பெகதபள்ளி கிராமத்தில் கடந்த ஜனவரி 22ம் தேதி ஒரே நாளில் 300 தெருநாய்கள் விஷ ஊசி போட்டு கொல்லப்பட்டுள்ளன. இந்தச் செயலில் ஈடுபட்டதற்காகக் கிராம பஞ்சாயத்து தலைவர் மற்றும் செயலாளர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இங்கு கடந்த ஜனவரி 19ம் தேதி சுமார் 100 நாய்கள் கொல்லப்பட்டன. அவற்றில் 50 நாய்களின் உடல்களைப் போலீசார் மீட்டுள்ளனர்.

தெருநாய்

ஹனம்கொண்டா மாவட்டம் ஷியாம்பேட்டை மற்றும் ஆரேபள்ளி கிராமங்களில் 300 நாய்களைக் கொன்ற வழக்கில், 2 பெண் பஞ்சாயத்து தலைவிகள் மற்றும் அவர்களது கணவர்கள் உட்பட 9 பேர் மீது வழக்கு பாய்ந்துள்ளது. காமரெட்டி மாவட்டத்தில் 200 தெருநாய்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் 5 பஞ்சாயத்து தலைவர்கள் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாய் தெருநாய் வெறிநாய்

விலங்கு நல ஆர்வலர்களின் தகவல்படி, கடந்த சில வாரங்களில் மட்டும் தெலுங்கானா முழுவதும் சுமார் 900 தெருநாய்கள் கொல்லப்பட்டுள்ளன. தேர்தல் சமயத்தில் "நாய் தொல்லையை ஒழிப்போம்" என்று கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காகவே, பஞ்சாயத்து தலைவர்கள் கூலிக்கு ஆட்களை வைத்து விஷ ஊசி போடச் செய்ததாகக் கூறப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!