5 ஆண்டுகளில் 9 லட்சம் இந்தியர்கள் குடியுரிமை துறப்பு ... மத்திய அரசு அதிர்ச்சி தரவுகள் வெளியீடு!

 
இந்தியன்
 

கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் சுமார் 9 லட்சம் இந்தியர்கள் தங்களது இந்தியக் குடியுரிமையைத் துறந்துள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த மத்திய வெளியுறவு இணையமைச்சர் கீர்த்தி வரதன், வெளிநாடுகளுக்கு குடியேறும் இந்தியர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டே இருப்பதாக தெரிவித்தார்.

அரசு வெளியிட்ட தரவுகளின் படி,

  • 2020 – 85,256

  • 2021 – 1,63,370

  • 2022 – 2,25,620

  • 2023 – 2,16,219

  • 2024 – 2,06,378

என மொத்தம் 8,96,843 பேர் தங்களது இந்தியக் குடியுரிமையை விட்டுக்கொடுத்துள்ளனர்.

அதேவேளை, 2011 முதல் 2019 வரை மட்டும் 11.89 லட்சம் பேர் குடியுரிமை துறந்திருந்ததாகவும் அரசு தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களிடமிருந்து 2024ஆம் ஆண்டில் மட்டும் 16,127 புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவித்தனர்.

இந்தியர்களின் குடியேற்றப் போக்கு தொடர்ந்து உயர்வதால், அரசு அதனை நுணுக்கமாக கண்காணித்து ஆவணப்படுத்தி வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!