94,234 மாணவர்களுக்கு ரூ.25000 மதிப்பிலான இலவச லேப்டாப்புகள்... 4.3 லட்சம் மாணவர்களுக்கு சைக்கிள்கள்.!..

 
மோகன் யாதவ்


 
மத்திய பிரதேசத்தில் முதல்வர்  மோகன் யாதவ் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது.  12ம் வகுப்பில் 75 சதவீதத்துக்கும்  கூடுதலான மதிப்பெண்களை பெற்ற 94,234 மாணவர்களுக்கு ரூ.25000 மதிப்பிலான இலவச லேப்டாப்புகளை மாநில அரசு வழங்கும். இந்த திட்டத்திற்காக மொத்தம் ரூ.235 கோடி செலவிடப்படும் என கூறியுள்ளார்.   

மோகன் யாதவ்

திறமையான மாணவர்களுக்கு அரசு துணை நிற்கும். எங்களுடைய செயல்பாட்டை இது பிரதிபலிக்கிறது. நம்முடைய இளம் மாணவர்களை நாம் வாழ்த்துகிறோம். அவர்களுக்கு துணையாக இந்த அரசு இருக்கும். இளைஞர்கள் மற்றும் மத்திய பிரதேசம் என இருவரின் முன்னேற்றத்திற்காக அனைத்து துறைக்கான கதவுகளையும் இந்த அரசு திறக்கும் எனக் கூறியுள்ளார். இந்நிலையில் அவர்  மாநிலத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் மீண்டும் லேப்டாப்புகள் வழங்கப்படும் என கூறியுள்ளார்.  அவர்களுக்கு சிறந்த வருங்காலம் அமைய வாழ்த்துகிறேன் எனவும் கூறியுள்ளார்.  

மோகன் யாதவ்

ஜூலை 10ம் தேதி மத்திய பிரதேசத்தில் குரு பூர்ணிமா கொண்டாடப்படும் எனக் கூறியுள்ளார். இதேபோன்று, 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் 4.3 லட்சம் மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கப்படும். இதன்படி மொத்தம் 5 லட்சம் மாணவர்கள், லேப்டாப்புகள் மற்றும் சைக்கிள்களை பெறுவார்கள். இதேபோன்று ஒவ்வொரு அரசு பள்ளியில் முதல் இடம் பிடிக்கும் மாணவர்களுக்கு ஸ்கூட்டர்கள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது