பௌர்ணமிக்கு 966 சிறப்பு பேருந்துகள்... இப்பவே முன்பதிவு செய்துக்கோங்க!

 
பேருந்துகள்

  
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இருந்து வார மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதுண்டு.  அந்த வாகியில் நாளை பௌர்ணமி பௌர்ணமி மற்றும் வாரவிடுமுறை தினத்தையொட்டி பயணிகள் நலன் கருதி 966 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக  போக்குவரத்து துறை தகவல் தெரிவித்துள்ளது.

அரசு பேருந்துகள்


அதன்படி  சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களுக்கு  நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை மார்ச் 14ம் தேதி  270 பேருந்துகளும், மார்ச் 15ம் தேதி சனிக்கிழமை 275 பேருந்துகளும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

பேருந்துகள்


சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு மார்ச் 14   மற்றும் 15ம் தேதி 51 பேருந்துகளும்  இயக்க திட்டமிடப்பட்டுள்ளது, மேலும் மாதாவரத்திலிருந்து 14ம் தேதி மற்றும் 15ம் தேதி அன்று 20 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும் , ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதுவரை வெள்ளிக்கிழமை 4,896 பயணிகளும், சனிக்கிழமை 2,381 பயணிகளும் மற்றும் ஞாயிறுக்கிழமை 6,020 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில்  தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்துகொள்ளலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web