2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி 98 பேர் படுகாயம்!! 18 பேர் கவலைக்கிடம்!!

 
பேருந்துகள் மோதல்

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் டபுள் டெக்கர் பேருந்தும் நகரப் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த கோர  விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 98 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.  உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதில் 18 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.   இந்த விபத்தில் காயமடைந்தவர்களில் 50 பேர் சுற்றுலாப்பயணிகள் என  முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க பேருந்துகள்

நியூயார்க் ராய்ட்டர்ஸ் மன்ஹாட்டனில் இருந்து முதல் அவென்யூ மற்றும் 23வது தெருவில் கிழக்குப் பகுதியில் இரவு 7 மணிக்கு பயணிகள் பேருந்தும் சுற்றுலா பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில்   இரட்டை அடுக்கு   சுற்றுலாப் பேருந்தின் முன்பக்க கண்ணாடிகள் உடைந்தன.  இது குறித்து நியூ யார்க் தீயணைப்புத் துறை அதிகாரிகள் “  2 பேருந்துகளிலும் கடும் கூட்ட நெரிசல் இருந்தது,  

அமெரிக்க பேருந்துகள்

இந்த கோர விபத்தில்  63 பேர் சம்பவ இடத்தில் படுகாயம் அடைந்திருந்ததாக மருத்துவர்களால் மதிப்பீடு செய்யப்பட்டனர். இதில் பெரும்பாலானவர்கள்   வெட்டுக்கள், கீறல்கள் மற்றும் காயங்கள் என தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும் சிலருக்கு எலும்பு முறிவு மற்றும் தலை மற்றும் கழுத்து காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web