பகீர்... 9ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம்... தாயின் கள்ளத்தொடர்பால் விபரீதம்!

 
கர்ப்பம்
 

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயமும் கூலித் தொழிலுமே மக்களின் வாழ்வாதாரம். வறுமை காரணமாக பலர் வேலை தேடி வெளியூர்களுக்கு செல்கின்றனர். குழந்தைகளை உறவினர்களிடம் விட்டுச் செல்லும் நிலை அதிகரித்து வருகிறது. இதனால் கண்காணிப்பின்றி சிறார்கள் பாலியல் ஆபத்துக்கு ஆளாகும் சம்பவங்கள் அதிகமாகி வருகின்றன.

கர்ப்பம்

செங்கம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 35 வயது பெண் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த குணசேகரன் என்பவருடன் குடும்பம் நடத்தி வந்தார். இந்த நிலையில் அந்த பெண்ணின் 14 வயது மகளுக்கு குணசேகரன் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. தாய்க்கு தெரிந்தே இந்த கொடுமை நடந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதன் விளைவாக அந்த சிறுமி ஏழு மாத கர்ப்பமாகியுள்ளார்.

போக்சோ நீதிமன்றம்

சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது கர்ப்பம் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விசாரணையில் குணசேகரன் கைது செய்யப்பட்டு போக்சோ சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். தாயின் துணையோடு நடந்த இந்த சம்பவம் செங்கம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற குற்றங்களைத் தடுக்க அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!