பள்ளிக்குச் செல்லும் முன் சோகம்… மயங்கி விழுந்த 9ம் வகுப்பு மாணவி பலி
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பள்ளிக்கு கிளம்பிக் கொண்டிருந்த 9ம் வகுப்பு மாணவி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காலை நேரத்தில் வழக்கம்போல் பள்ளிக்குத் தயாராகிக் கொண்டிருந்த மாணவி, வீட்டில் இருந்தபோதே மயக்கமடைந்து கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.

அவரை உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது மாணவி ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டது. மாணவிக்கு முன்பே இருதய நோய் இருந்ததாகவும், அதற்காக சிகிச்சை பெற்று வந்ததாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளம் வயதில் மாணவி மரணம் அடைந்தது அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
