சளி, காய்ச்சலால் 6 மாத குழந்தை பலி!! உறவினர்கள் தர்ணா போராட்டம்!! மருத்துவர்களின் அலட்சியத்தால் சோகம்!!

 
குழந்தை

அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் அலட்சிய போக்கால் பல நேரங்களில்  உயிர்ப்பலிகள் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே அதிருப்தியை உருவாக்கி வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கோட்டை தெருவில் வசித்து வருபவர் இப்ராஹிம். கூலி தொழிலாளியான இவருடைய மனைவி  சபீனா. இவர்களுக்கு முகமது ரசூல் என்ற 6 மாத ஆண் குழந்தை இருந்தது. சளி மற்றும் காய்ச்சல்  வந்து வீட்டிலேயே மருந்து கொடுத்து குணமாகவில்லை. இ

சளி காய்ச்சல் அதிகரித்ததால் மருத்துவர்கள் உள்நோயாளியாக மருத்துவமனையில் அனுமதிக்க அறிவுறுத்தினர்.அதன் பேரில் வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.  3 நாட்களாக சிகிச்சை பெற்று பிறகு குழந்தை ஓரளவு தேறி வந்ததாக கூறப்படுகிறது. 

baby

இந்நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் குழந்தைக்கு காய்ச்சல் அதிகமாக இருந்த காரணத்தால் பால் குடிக்கவில்லை.  அப்போது குழந்தையின் பெற்றோர் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் மற்றும் நர்சுகளிடம் குழந்தைக்கு காய்ச்சல் அதிகமாக இருக்கிறது. பால் குடிக்க மறுப்பதாக தெரிவித்துள்ளனர். 

இதனை கேட்டும் மருத்துவர் மற்றும் செவிலியர்கள் அலட்சியமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நள்ளிரவில் குழந்தை பரிதாபமாக இறந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வந்தவாசி அரசு மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Vandavasi GH

குழந்தை இறப்புக்கு காரணமாக இருந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசு மருத்துவமனை தரம் உயர்த்த வேண்டும் என்றும் உறவினர்கள் மருத்துவமனையின் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு வருகை தந்த மாவட்ட இணை இயக்குனர் பொறுப்பு மருத்துவர் ஏழுமலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் உரிய விசாரணை நடத்தபடும் என உறுதி அளித்தார். இதன் பிறகு உறவினர்கள் குழந்தையின் உடலை பெற்றுக் கொண்டு போராட்டத்தை கைவிட்டனர். இந்த போராட்டம் காரணமாக இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.  சளி காய்ச்சல் காரணமாக 6 மாதக் குழந்தை உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web