ஒவ்வொருத்தருக்கும் ரூ.10 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் கார்! அர்ஜெண்டினாவைத் தோற்கடித்த வீரர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மன்னர்!

 
சவுதி மன்னர்

கால்பந்து விளையாட்டுகளில் பலம் வாய்ந்த அர்ஜெண்டினா அணியை தோற்கடித்த சவுதி அரேபியா அணியின் வீரர்கள் ஒவ்வொருவருக்கும் ரூபாய் 10 கோடி  மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசளிப்பதாக சவுதி  மன்னர் அறிவித்துள்ளார். கத்தாரில், 22வது உலகக் கோப்பை கால்பந்து போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பலம் வாய்ந்த அர்ஜென்டினா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியா அணி வெற்றி பெற்று உலக கால்பந்து ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது. 

அர்ஜெண்டினாவுக்கு எதிரான போட்டியில் வரலாற்று வெற்றி பெற்ற சவுதி அரேபியா அணி வீரர்களைப் பாராட்டும் வகையிலும், நாட்டு  மக்கள் இந்த வெற்றியை முழுதாக அனுபவிக்கும் வகையிலும், அந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக நாடு முழுவதும் ஒருநாள் தேசிய விடுமுறை அறிவித்து சவுதி மன்னர் சல்மான் பின் அப்துல் அஜிஸ் அல் சவூத் சவூத் உத்தரவிட்டிருந்தார்.

சவுதி மன்னர்

தற்போது, கால்பந்து விளையாட்டில் பலம் வாய்ந்த அர்ஜென்டினாவை வீழ்த்திய சவுதி அரேபிய அணியின் வீரர்களுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசாக வழங்கப்படும் என சவுதி மன்னர் இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.

சவுதி அரேபியா கால்பந்து

அனியின் வீரர்கள் கத்தாரில் இருந்து திரும்பி வந்தவுடன் அவர்களுக்கு கார் வழங்கப்படும் என அவர் அறிவித்துள்ளார். ரோல்ஸ் ராய்ஸ் கார் இந்திய மதிப்பில் 10 கோடி ரூபாய் வரை விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web