ஜல்லிக்கட்டு போட்டிகளுக்குத் தடையா!? இன்று வழக்கு விசாரணை!

 
ஜல்லிக்கட்டு

தமிழகத்தில் தை மாதத்தில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக பிரசித்தி பெற்றவை. உலக நாடுகளில் இருந்தெல்லாம் ஜல்லிக்கட்டு போட்டிகளைப் பார்க்க சுற்றுலா பயணிகள் தென் மாவட்டங்களில் குவிவார்கள். இந்நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகள் துன்புறுத்தப்படுவதாக  பீட்டா மற்றும் விலங்குகள் நல அமைப்புக்கள் தமிழக அரசை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு தடை விதிக்க கோரி வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்தப் போட்டிகளுக்கான சிறப்பு சட்டத்தை ரத்து செய்யவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்குகளை, உச்சநீதிமன்றத்தில் அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. இதுகுறித்து கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்டு  விசாரணையை ஒத்திவைக்க  தமிழக அரசு விண்ணப்பித்திருந்தது.

ஜல்லிக்கட்டு

ஆனால் தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம், ஜல்லிக்கட்டுக்கு தடை கோரிய வழக்குகள் விசாரிக்கப்பட்டன. இந்த வழக்கில்  வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஒண்டிராஜ் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த வழக்கின் விசாரணையில் கலந்து கொள்ள  டெல்லி செல்வதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய ஒண்டிராஜ், ஜல்லிக்கட்டு போட்டிகளை முழுமையாக  முடக்கலாம் என பீட்டா அமைப்பு எண்ணியுள்ளது.  தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வாதாடி ஜல்லிக்கட்டைத் தடையின்றி நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.  

ஜல்லிக்கட்டு

அதே போல்  ஜல்லிக்கட்டு விசாரணை குறித்து டெல்லி முகாம் அலுவலகத்தில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகனை சந்தித்து பேச்சுவார்த்தை  நடத்தினார். அப்போது, மத்திய அரசு சார்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், முன் வைக்கப்பட வேண்டிய விவாதங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.  மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் சித்தார்த் லூத்ரா, இந்த விவகாரத்தை ஜனவரி மாதத்துக்கு முன் விசாரிக்க வேண்டும் என முறையிட்டார். தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் கபில் சிபல், ஜல்லிக்கட்டு அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியதை எடுத்துரைத்தார். ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் தமிழக அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்யக் கோரிய மனுக்கள் மீது இன்று விசாரணைக்கு வருகிறது. 

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web