காதலன் கண் எதிரே கல்லூரி மாணவி பலாத்காரம்! கத்தியை காட்டி மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை!

 
பாலியல் துன்புறுத்தல்

காதலன் கண் எதிரே தனியார் கல்லூரி மாணவியை கத்தியைக் காட்டி மிரட்டி கூட்டு பலாத்காரம் செய்தது காஞ்சிபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனிமையில் சந்தித்த காதலர்களிடம் இந்த கும்பல் அத்துமீறி உள்ளனர். காஞ்சிபுரம் விப்பேடு கிராமத்திற்கு அருகில் வந்தவாசி - கீழம்பி புறவழிச்சாலை சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இணைக்கும் வகையில் அமைந்துள்ளது.  இதே பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்த காதலர்கள் இருவர் மாலை 6.30மணிக்கு  காலி வீட்டு மனைக்கு தனியாக சந்தித்து பேசிக் கொண்டிருந்தார்கள்.  இவர்கள் இருவரும்  கடந்த 2 வருடங்களாக  காதலித்து வந்தனர். 

பாலியல் வன்கொடுமை
அந்த சமயத்தில் அந்தப் பக்கமாக மது அருந்திவிட்டு வந்த 4 பேர் கொண்ட கும்பல் இருவரையும் கத்தியை காட்டி மிரட்டியது. காதலன் கண்முன்னே காதலியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். அதன்பிறகு அந்த கும்பல் தப்பியோடி விட்டது.  இதுவரை புகார்கள் எதுவும் பதிவாகவில்லை என்ற போதிலும் தகவல் அறிந்த காவல்துறை  இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

காஞ்சிபுரம் காவல்நிலையம்

போலீசார் நடத்திய தொடர் விசாரணையில், குண்டுகுளம் பகுதியை சேர்ந்த சிவகுமார், மணிகண்டன், விமல், தென்னரசு ஆகிய 4 பேர் மாணவியை கத்திமுனையில் மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமையில் செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.  பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினர் புகார் அளிக்கவில்லை என்ற போதிலும்  மாவட்ட கண்காணிப்பாளர்  உத்தரவின் பேரில்,  காவல்துறையினர் விரைவாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!

From around the web