இறப்பிலும் இணைப் பிரியாத தம்பதியர்... மனைவி இறந்ததும் உயிரை விட்ட கணவன்!

 
வயதான தம்பதி

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் மனைவி இறந்த தகவலே தெரியாமல், சில மணி துளிகளிலேயே, கணவரும் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இறப்பிலும் இணைப் பிரியாத இந்த தம்பதியரின் பாசமும்,நேசமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், அடுத்தடுத்து தாயையும், தந்தையையும் இழந்த குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்தனர்.

திருச்சி பாலக்கரை இரட்டைப் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஏ. கிருஷ்ணன்(91). இவரது மனைவி சம்பூரணத்தம்மாள்(86). இவர்களுக்கு 3 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர்.
வயதான இந்த தம்பதியரில் கணவர் கிருஷ்ணன் மண்ணச்சநல்லூர் பூமிநாத நகரிலுள்ள மகன் வீட்டிலும், சம்பூரணத்தம்மாள் திருச்சி காட்டூரில் உள்ள மற்றொரு மகன் வீட்டிலும் இருந்து வந்தனர்.

மண்னச்சநல்லூர்
இந்நிலையில், இன்று அதிகாலை 5.30 மணிக்கு சம்பூரணத்தம்மாள் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து அவரது உடலை, தந்தை வசித்து வரும் மண்ணச்சநல்லூர் பூமிநாத நகரில் உள்ள வீட்டில் வைப்பதற்காக, குடும்பத்தினர் ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தனர்.

சம்பூரணத்தம்மாள் உடலை ஆம்புலன்ஸில் ஏற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்த போது, மண்ணச்சநல்லூர் பூமிநாத நகரில் வீட்டிலிருந்த கிருஷ்ணனும் காலை 6.30 மணிக்கு உயிரிழந்தார். ஒரே நேரத்தில் அடுத்தடுத்து தாயும், தந்தையும் உயிரிழந்தது குடும்பத்தினரை அதிர்ச்சியடைய செய்தது. 

தம்பதி மரணம்

இதைத் தொடர்ந்து, கிருஷ்ணன், சம்பூரணத்தம்மாள் உடல்கள் அருகருகே அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்த உறவினர்கள்.அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் இருவரது உடலுக்கும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மனைவி இறந்த சிறிது நேரத்தில் வயதான கணவரும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web