சிப்காட் தொழிற்சாலையில் தீவிபத்து !! 30 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்!!

 
தீவிபத்து

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அம்மாசத்திரம் என்ற இடத்தில்  சிப்காட் தொழிற்பேட்டை அமைந்துள்ளது. இங்கு அலங்கார நாற்காலிகள், குஷன், சோபா தயாரிக்கும் தனியார் ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது.

தீவிபத்து

இந்த ஆலையில் திடீரென தீவிபத்து  ஏற்பட்டுள்ளது. திகுதிகு வென பற்றி எரியும் தீயால் அப்பகுதியே புகைமண்டலமாக காட்சி அளிக்கிறது. கும்பகோணம் அருகே அம்மா சத்திரம் என்ற இடத்தில் சிப்காட் தொழிற்பேட்டை உள்ளது. இந்த தீவிபத்தில் சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் நாசமடைந்து உள்ளதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

நூற்பாலையில்  தீ  விபத்து

தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதும் உடனடியாக விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 1 மணி நேரம் கடும் போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த ஆலையில் மரப்பலகைகள் அதிக அளவில் இருந்ததால் சடசடவென பற்றி எரியத் தொடங்கியதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். 

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web