செருப்பை கவ்வி ஓடும் பாம்பு!! வைரலாகும் வீடியோ!!

 
பாம்பு

சமூக வலைதளங்களில் பல வகையான அதிசய வீடியோக்கள் பகிரப்பட்டு வருகின்றன. நம்ப முடியாத விஷயங்கள் பார்க்கப்படும் போது அவற்றை ரசிப்பதை விட்டு அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களி பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர். அந்த வகையில் பாம்பு ஒன்று தனது வாயினால் ரப்பர் செருப்பை எடுத்துச் செல்கிறது. 'பாம்பால் செருப்பை தூக்கிச் செல்ல முடியுமா என்பது ஆச்சரியமே.

பாம்பு

பாம்பு என்றாலே படையும் நடுங்கும் என்பது பழமொழி.  பாம்பு மீதான பயத்தினால்தான் குடியிருப்பு பகுதிகளுக்குள் பாம்பு வந்தாலே அடித்து விரட்டுவதுண்டு.  வீட்டு வாசலில் பாம்பு வருவதை  சிசிடிவி கேமராவில் பார்த்த பெண் ஒருத்தி தனது செருப்பை எடுத்து பாம்பு மீது வீசினார்.  அந்த பாம்போ அதற்கு பயப்படாமல், வீசிய செருப்பை லாவகமாக கவ்விக் கொண்டு செல்கிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகி  வருகிறது.

இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ''பாம்பால் செருப்பை தூக்கிச் செல்ல முடியுமா என்பது ஆச்சரியமாக இருக்கிறது. அதற்கு கால்களும் இல்லை. இது எந்த இடத்தில் என்று தெரியவில்லை'' எனக் குறிப்பிட்டுள்ளார்.  உனக்கு  தான் காலே இல்லையே செருப்பு எதற்கு  என நெட்டிசன்கள் கமெண்ட் பதிவு செய்துள்ளனர்.  இந்த வீடியோவை இதுவரை 2.78 லட்சம் பேர் பார்த்துள்ளனர். பலரும் விதவிதமான தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web