பிரபல கல்லூரியில் திடீரென அசைவ உணவுகளுக்கு தடை! கொந்தளிக்கும் மாணவர்கள்!

 
அசைவம்

இது நாள் வரையில் கல்லூரியின் விடுதியில் தங்கியிருந்த மாணவர்களுக்கு அசைவ உணவு வழங்கி வந்த நிலையில், திடீரென கல்லூரியின் கேண்டீனிலும், விடுதியிலும் அசைவ உணவு வகைகளுக்கு தடை போட்டு, சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது டெல்லியில்  உள்ள ஹன்ஸ்ராஜ் கல்லூரி. இந்த திடீர் தடை மாணவர்களைக் கலவரப்படுத்தியதோடு, சமூக ஆர்வலர்களும் கொந்தளித்துள்ளனர்.

ஆயிரக்கணக்கான மாணவர்கள் பல்வேறு  மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் டெல்லி பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரியான ஹன்ஸ்ராஜ் கல்லூரியில் படித்து வருகின்றனர். இவர்களில் பலர் கல்லூரி விடுதியிலும் தங்கி படித்து வருகின்றனர். கொரோனா தொற்றுக்கு பிறகு முழு நேரமாக செயல்பட தொடங்கிய கல்லூரி, கேண்டீன் மற்றும் விடுதியில் உள்ள மாணவர்களுக்கு அசைவ உணவு வழங்குவதை எந்த விதமான அறிவிப்பும், கலந்தாய்வும் இல்லாமல் சரியான காரணங்களையும் கூறாமல் திடீரென நிறுத்தியுள்ளது.

Non-veg

விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் அசைவ உணவு வழங்கப்படுவதில்லை எனப் புகார் அளிக்கப்பட்ட நிலையில் தற்போது கல்லூரி நிர்வாகத்தின் இந்த செயல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கல்லூரி விடுதியில் படிக்கு வெளிநாட்டு மாணவர்கள் உணவு பிரச்சனை காரணமாக விடுதியில் இருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஹன்ஸ்ராஜ் கல்லூரியின் 2ம் ஆண்டு மாணவர் அபய் மவுரியா இது குறித்து கூறுகையில், “முன்பு அசைவ உணவுகள் வழங்கப்பட்டு வந்த நிலையில், திடீரென அசைவ உணவும், முட்டையும் நிறுத்தப்பட்டது.

தென் மாநிலங்களில் இருந்து வரும் மாணவர்கள் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர். அசைவம் சாப்பிடும் பழக்கம் அவர்களுக்கு உள்ளது. அசைவ உணவை சாப்பிட விரும்பும் மாணவர்களுக்கு அசைவ உணவு கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன் என்று கூறினார்.

ஹன்ஸ்ராஜ் கல்லூரி

ஹன்ஸ்ராஜ் கல்லூரி முதல்வர் பேராசிரியர் ரமா கூறியதாவது, சைவ உணவுகளை மட்டுமே வழங்குவது குறித்து நிர்வாகத்திற்கு புகார் எதுவும் வரவில்லை. எந்த மாணவரும் என்னை அணுகவில்லை அல்லது புகார் தெரிவிக்கவில்லை.

ஹன்ஸ்ராஜ் கல்லூரியின் கேண்டீனில், அசைவ உணவு வழங்கப்படவில்லை. அசைவ உணவு வழங்கும் வசதி விடுதியில் இருந்தது, ஆனால் கொரோனா நம் வாழ்வில் வந்த காலம் மற்றும் எங்கள் வாழ்க்கை முறையை மாற்றி, நமது ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கை முறைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று நினைத்தோம்” என்று கூறினார்.

மேலும் விடுதியில் உள்ள 90 சதவீதம் பேர் சைவம்தான் என்றும், அசைவ உணவுகளை விரும்புவோர், விடுதிக்கு வெளியே சென்று சாப்பிட்டுக் கொள்ளத் தடையில்லை என்றும் கூறியுள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க