படப்பிடிப்பில் பயங்கர விபத்து! நடிகர் விஜய் ஆண்டனி, கதாநாயகி காவ்யா மருத்துவமனையில் அனுமதி!

 
விஜய் ஆண்டனி பிச்சைக்காரன்

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில், ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் படப்பிடிப்பு லங்காவியில் நடந்து வருகிறது. இந்நிலையில், இன்றைய படப்பிடிப்பில் பெரும் விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விபத்தில், நடிகர் விஜய் ஆன்ட்டனி, கதாநாயகி காவ்யா ஆகிய இருவரும் படுகாயம் அடைந்துள்ளதாகவும், இருவரும் ஏர் ஆம்புலன்ஸ் மூலமாக சிகிச்சைக்காக கோலம்பூருக்கு கொண்டு செல்லப்படுவதாகவும் மலேசியாவிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜய் ஆண்டனி

'பிச்சைக்காரன் 2’ படப்பிடிப்பின் போது படகு சம்பந்தமான காட்சிகளைப் படமாக்கிக் கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில், நடிகர் விஜய் ஆண்டனி காயம் அடைந்தார். 

பிச்சைக்காரன் 2 படத்தின் ட்ரைலர் காட்சிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. பிச்சைக்காரன் 2 படத்தை தயாரித்து நடிப்பதோடு, இசையமைப்பாளராகவும், இயக்குநராகவும் அந்த படத்தில் விஜய் ஆண்டனி பணியாற்றி வருகிறார். இந்தப் படம் மூலமாக விஜய் ஆண்டனி இயக்குநராக அறிமுகமாகிறார். 

ஆண்டனி

விஜய் ஆண்டனியுடன் நடிகர்கள் ஜான் விஜய், ஹரீஷ் பேராடி, ஒய்ஜி மகேந்திரன், அஜய் கோஷ், யோகி பாபு, நடிகை காவ்யா, ரித்திகா சிங் என பலரும் முக்கிய கதாபாத்திரிங்களில் நடித்து வருகிறார்கள். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!

From around the web