இளம் பெண் வழக்கறிஞர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை!! தொடரும் சோகம்!!

 
ஹேமாவதி

இன்றைய இளைய தலைமுறையினருக்கு பிரச்சனைகளை கையாளும் திறமை குறைவாக இருப்பதால் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். இந்த அழுத்தத்தை போக்கும் வழி தெரியாமல் பெரும்பாலோர் தற்கொலை செய்வதையும் முடிவாக கருதுகின்றனர்.  இதில் படிக்காதவர்கள், ஏழைகள் ,படித்தவர்கள், பணக்காரர்கள் என பாரபட்சம் கிடையாது. இதே போல் பல சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது.

பூங்கா நகர் ரயில் நிலையம்

கடலூர்  மாவட்டம் மணலூர் கிராமத்தில் வசித்து வருபவர் 28 வயதான ஹேமாவதி. இவர் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். நேற்று காலை  பூங்கா ரயில் நிலையத்திற்கு  மொபைலில் பேசியபடியே வந்த  ஹேமாவதி திடீரென அவ்வழியாக செங்கல்பட்டில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி சென்ற மின்சார ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
ரயில் நிலையில் இந்த மற்ற பயணிகள் இச்சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.  இது குறித்து ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே போலீசார், ஹேமாவதியின்  உடலை மீட்டு  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ்
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு  வழக்கறிஞர் ஹேமாவதி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவருடயை மொபைல் போனில் கடைசியாக பேசியதை வைத்து தான்  அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இளம் வழக்கறிஞர்  ஒருவர்  பிரச்சனைகளை சந்திக்கும் மன தைரியம் இல்லாமல் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web