பகீர் வீடியோ!! 3 வயது சிறுமியை ரயில் தண்டவாளத்தில் தள்ளிய கொடூரம்!!

 
Oregon

அமெரிக்காவின் ஓரிகான் மாகாணத்தில் உள்ள போர்ட்லேண்டின் கேட்வே ட்ரான்சிட் சென்டர் மேக்ஸ் பிளாட்பார்மில் தனது அம்மாவுடன் நின்று கொண்டு இருந்த 3 வயது சிறுமியை பெண் ஒருவர் திடீரென ரயில் பாதையில் தள்ளிவிட்டவிட்டார். இந்த அதிர்ச்சி காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது.

Oregon

அந்த வீடியோவில் சிறுமியின் பின்னால் அமர்ந்திருந்த பெண் திடீரென எழுந்து நின்று கீழே உள்ள தண்டவாளத்தில் 3 வயது சிறுமியை தள்ளிவிடுவது பதிவாகியுள்ளது, அத்துடன் இதனை கண்ட சுற்றி இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்ததும் பதிவாகியுள்ளது.

ரயில் பாதையில் விழுந்த சிறுமியின் முகம் தண்டாவளத்தில் இடித்தது, நல்ல வேளையாக அங்கிருந்தவர்களில் ஒருவர் அடுத்த ரயில் வருவதற்குள் சிறுமியை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றனர். இதில் சிறுமியின் தலையில் வலியும், நெற்றியில் இரத்தம் கசிவதற்கான சிவப்பு குறி காணப்பட்டது


இந்த சம்பவத்தை தொடர்ந்து 32 வயதான ப்ரியானா லேஸ் வொர்க்மேன் என்ற பெண்ணை போலீசார் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளார். முல்ட்னோமா மாகாண மாவட்ட வழக்கறிஞர் அலுவலகம் சம்பந்தப்பட்ட நபர் மீது குற்ற வழக்கு பதிந்துள்ளது. அத்துடன் அந்த நபரை காவலில் வைத்திருக்கவும், ஜாமீன் இல்லாமல் வைத்திருக்கவும் கோருகிறது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web