விஷ பாம்பை பிடித்து ஆட்டம் போட்ட இளைஞர்!! புத்தாண்டில் சோகம்!!

 
கடலூர்

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூர் சுப்பராயன் நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன் (எ) அப்பு. சலவைத் தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் (டிச.31) இரவு மதுபோதையில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவ்வழியாக சென்ற பாம்பு ஒன்றைக் கண்ட அவர், அதனைப் பிடித்து ‘இது புத்தாண்டு பரிசு’ என தனது நண்பர்களுக்கு காட்டியுள்ளார். 

கண்ணாடி விரியன்

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் பயந்து ஓடவே, அந்த பாம்பு மணிகண்டனை கண்ணிமைக்கும் நேரத்தில் கடித்ததில் அவர் அங்கே மயங்கி விழுந்தார். உடனே அங்கிருந்தவர்கள் மயங்கி விழுந்த அந்த இளைஞரை அந்த பாம்புடன் கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார். 

மேலும், அவர் கொண்டு வந்த அந்த பாம்பை அரசு மருத்துவமனையில் பிரித்துப் பார்த்தபோது அது கொடூரமான விஷம் கொண்ட கண்ணாடி விரியன் என்பது தெரியவந்தது. மேலும், அவருடன் வந்த கபிலன் என்பவர் அந்தப் பாம்பினை பிரித்து பார்த்துக் கொண்டிருந்தபோது, அந்த பாம்பு அவரையும் கடித்துவிட்டது. தற்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகிறார். மருத்துவமனையில் இருந்தவர்கள் அந்த பாம்பினை அடித்து கொன்றுவிட்டனர்.

சுப்பராயன்

மதுபோதையில் கொடூர விஷத் தன்மையுடைய கண்ணாடி விரியன் பாம்பை பிடித்து புத்தாண்டு பரிசு வழங்கிய நபர், அதே பாம்பு கடித்ததில் உயிரிழந்த சம்பவம் புத்தாண்டு தினத்தில் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பாம்பு அவரை கடித்த நிலையிலும், பாம்பினை காட்டி உங்களுக்கு புத்தாண்டு பரிசு என காட்டியுள்ளார். சிறிது நேரத்தில் அவர் அங்கேயே மயங்கி விழுந்தார்.

உடனடியாக அவரது நண்பர்கள் கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வரும் வழியிலேயே மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அவருடன் வந்த கபிலன் என்பவரையும் பாம்பு கடித்துவிட்டது.  அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனையில் இருந்தவர்கள் அந்த பாம்பினை அடித்து கொன்றுவிட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web