அறிமுகப் போட்டியிலேயே சதம் விளாசி சாதனை படைத்த இளம் வீரர்!! குவியும் வாழ்த்துக்கள்!!

 
ஜாகீர் ஹாசன்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் முதல் சீசனில் இந்திய அணி இறுதிப்போட்டி வரை சென்றது. தற்போது இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி  நடைபெற்று வருகிறது. முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்க்சில்  404 ரன்கள் எடுத்திருந்தது. அதன் பிறகு ஆடிய பங்களாதேஷ் அணி 150 நாட்களுக்கு ஆல் அவுட் ஆனது . 2 வது இன்னிங்சில்  இந்திய அணி 258 ரன்கள் எடுத்து ஆட்டத்தை  டிக்ளர் செய்தது.  தற்போது பங்களாதேஷ் அணிக்கு 513 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது .

ஜாகீர் ஹாசன்


513 ரன்கள் என்ற இலக்குடன்  2வது இன்னிங்சில் பங்களாதேஷ் அணி  3ம்  நாள் ஆட்ட நேர முடிவில் 46 ரன்களுக்கு விக்கெட் இழப்பு எதுவும் இல்லை.  4வது நாள் ஆட்டத்தில் சாண்டோ மற்றும் ஜாகிர் ஹசன் ஆகிய இருவரும் தங்களது அரை சதங்களை அடித்து சிறப்பாக  ஆடினர் .176 ரன்கள் எடுத்திருந்த போது சாண்டோ உமேஷ் யாதவ் பந்து வீச்சில் ரிஷப் பண்டிடம் கேட்ச் கொடுத்து  ஆட்டம் இழந்தார் .ஜாஹிர் ஹசன் அறிமுகப் போட்டியிலேயே தனது முதல் சதத்தை நிறைவு செய்தார் .  

ஜாகீர் ஹாசன்

பங்களாதேஷ் அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அறிமுக போட்டியிலேயே சதம் அடித்த 4வது ஆட்டக்காரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இவருக்கு சர்வதேச அளவில் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.

பங்களாதேஷ் அணியின் டெஸ்ட் வரலாற்றில் அறிமுக போட்டியிலேயே சதம் அடித்த தொடக்க வீரர் என்ற சாதனையை ஜாகீர் ஹசன் படைத்துள்ளார். 224 பந்துகளில் 100 ரண்களை எடுத்திருந்த ஜாகிர் ஹசன் அஸ்வினின் பந்து வீச்சில் விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டத்தை  இழந்தார் .

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web