முன்னாள் அமைச்சர் கார் மீது ஆசிட் வீச்சு!! அதிமுக வேட்பாளர் கடத்தல்!! பரபரக்கும் அரசியல் வட்டாரம்!!

 
விஜயபாஸ்கர்

கரூர் மாவட்டத்தில் இன்று  ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தேர்தல்  மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்டத்தில் மொத்தமாக உள்ள  12 மாவட்ட கவுன்சிலர்களில் 6 பேர் திமுக, 6 பேர் அதிமுக . இதில்  அதிமுக சார்பில் திருவிக என்பவர் ஊராட்சிமன்ற துணை தலைவர் தேர்தலுக்கு போட்டியிட்டார்.  இவரை முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது காரில் ஆதரவாலர்களுடன் அழைத்து சென்றார்.  

கார் கடத்தல்

அதே சமயத்தில்  திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர்-கரூர் தேசிய நெடுஞ்சாலையின் நாகம்பட்டி பகுதியில் சென்றபோது 4 கார்களில் வந்த மர்ம நபர்கள் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் காரை சுற்றி வளைத்தனர். அந்த மர்ம நபர்கள் கார் மீது ஆசிட் வீசி, கார் கண்ணாடியை அடித்து உடைத்தனர்.  அத்துடன்  காரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் வந்த ஊராட்சி மன்ற துணைத்தலைவர் வேட்பாளர் திருவிகவையும் கடத்தி சென்றனர். தகவல் அறிந்ததும் உடனடியாக  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கரூர் மாவட்ட காவல்துறை விசாரணையில் ஈடுபட்டது

விஜயபாஸ்கர்

அங்கிருந்த  சிசிடிவி பதிவுகள் மூலம் தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றவர்கள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தின் முன்னாள் அமைச்சர்  கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதோடு  ஆசிட் வீச்சு, வேட்பாளர் கடத்தல் என குற்றச்சம்பவங்கள் தொடர்ந்து நடந்தது தமிழகம் முழுவதும் அரசியல் வட்டாரத்தில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web