மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம்!? பரபரப்பும் டெல்லி!

 
பாஜக

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் வாரத்தில் தலைநகர் டில்லியில் விருந்து கொண்டாட்டங்கள் தூள் பறக்கும்.  மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் கட்சியின் முக்கிய தலைவர்கள், அமைச்சர்கள் என அதிகார வர்க்கம் விருந்து கொடுத்து கொண்டாடுவார்கள். ஆனால் இந்த ஆண்டு அதுபோன்ற விருந்துகள் மிக சொறப அளவிலேயே நடந்ததாம். காரணம்,  மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றப்படும் என்ற தகவல்தான் என்கிறார்கள் அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள்.

இந்த ஆண்டு நடக்க இருக்கும் ஒன்பது மாநில சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள கட்சியில் அமைப்பு ரீதியாக பல மாற்றங்களைச் செய்ய பாஜக  மேலிடம் முடிவு செய்துள்ளது. அதன்படி அமைச்சர்களாக இருக்கும் மூத்த தலைவர்கள் பலர் கட்சிப்பணிக்கு அனுப்பப்படுவார்கள்.  

டெல்லி

ஜூனியர்கள் சிலருக்கு அமைச்சரவையில் வாய்ப்பு அளிக்கப்படும் என்ற தகவலும் வெளியாகிறது. இணை அமைச்சர்களாக இருக்கும் ஆறு ஜூனியர் தலைவர்கள் பலரும் கேபினட் அமைச்சரவை கேட்டு கட்சித் தலைவர்களிடையே காய் நகர்த்தி வருகின்றனராம். அதேபோல், மூத்த அமைச்சர்கள் பலரும் தங்கள் பதவி இருக்குமா?  இல்லை கட்சிப்பணிக்கு அனுப்பப்படுவோமா என்று தெரியாமல் குழம்பிப்போய் உள்ளனர். அதனால் புத்தாண்டு விருந்துகளில் சீனியர் அமைச்சர்கள் இந்தமுறை ஆர்வம் காட்டவில்லை என்று டெல்லி பட்சி தகவல் தெரிவிகிறது.

மோடி

இந்நிலையில் கருடா எதுடா சுகம்டா என்றால் இருக்கும் இடமே என்பது போல பாஜக எம்.பிக்கள், எம்எல்ஏ சீட் கேட்கும் நிலையும் ஏற்பட்டிருக்கிறது “கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது.  விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.  இந்நிலையில், கர்நாடக பாஜக தலைவர்கள், குறிப்பாக சிட்டிங் எம்பியாக இருக்கும் பலர், மாநிலத்திலேயே இருக்க விரும்புகிறார்களாம். இதனால், அவர்கள் வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து காய் நகர்த்த தொடங்கியுள்ளனர். மைசூரை சேர்ந்த பிரதாப் சிம்ஹா, ஹாவேரி சிவக்குமார் உடாசி, விஜயபுரா ரமேஷ் ஜிகா ஜிநாகி, கொப்பல் சங்கண்ணா என பல எம்பிக்கள் சட்டசபை தேர்தலில் எம்.எல்,ஏ ஆகிவிட வேண்டும் என தலைமையிடம் பேசி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!

From around the web