வளைகாப்பு நிகழ்ச்சியில் நடிகர் விஜய்! ப்ரியா, அட்லிக்கு வாரிசு!

 
விஜய் ப்ரியா அட்லி

நடிகர் விஜய்க்கு தெறி ஹிட் கொடுத்த இயக்குநர் அட்லீ, ப்ரியா  தம்பதியினர் வாரிசை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில், சென்னையில் நடைப்பெற்ற ப்ரியாவின் வளைகாப்பு நிகழ்ச்சியில் முதல் ஆளாக நடிகர் விஜய் கலந்து கொண்டு பரிசு பொருட்கள் கொடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அட்லீ, ஷங்கரின் எந்திரன், நண்பன் ஆகிய இரு படங்களில் பணிபுரிந்தார். அதன் பின்னர் தமிழில் ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இவர் திரைப்படம் இயக்குவதற்கு முன்பே இவர் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘முகப்புத்தகம்’ என்னும் குறும்படத்தை இயக்கியுள்ளார்.

நடிகர் விஜய் நடிப்பில் தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். தற்போது பாலிவுட்டில் ஷாருக்கானுடன் இணையும் படமான ‘ஜவான்’ அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாக உள்ளது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது.


இதனிடையே சீரியல் நடிகை கிருஷ்ணபிரியா என்பவரை கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் 9-ம் தேதி அட்லி திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் திருமணமாகி சரியாக 8 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் தற்போது அட்லி தனது மனைவி ப்ரியா கர்ப்பமாக இருப்பதை சமூக வலைதளத்தில் அட்லி அறிவித்திருந்தார்.

இந்நிலையில் பிரியா அட்லியின் வளைகாப்பு நிகழ்வு நேற்று சென்னையில் நடைபெற்று. இதில் இருவரின் குடும்பத்தினர், திரையுலகினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

Atlee

இந்த நிகழ்வில் நடிகர் விஜய் கலந்து கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. அட்லி மற்றும் பிரியாவுக்கு நடிகர் விஜய் பரிசு ஒன்றையும் தான் கையில் எடுத்து கொண்டு மேடையில் வந்து கொண்டு தனது வாழ்த்துகளை பதிவு செய்தார். அட்லீயின் முதல் வாரிசை வரவேற்க நடிகர் விஜய் தளபதி 67 பட லுக்கில் வந்து சென்று உள்ளார்.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web