நடிகை ஐஸ்வர்யா லட்சுமி காதல்! நடிகரின் படத்துடன் ஹார்ட்டின் வரைந்து தகவல்!

 
ஐஸ்வர்யா லட்சுமி

காதலில் விழுந்தார் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. ஏற்கெனவே நடிகை ஐஸ்வர்யா லட்சுமி காதலில் சிக்கியதாக வந்த வதந்திகளுக்கு பதில் சொல்லாமல் இருந்த நிலையில், கத்திரிக்காய் முற்றி, கடைத் தெருவுக்கு தானே வரணும் என்று கோலிவுட் பத்திரிக்கையாளர்கள் சூசகமாக எழுதி வந்தனர். இந்நிலையில், நடிகர் அர்ஜுன் தாஸ் உடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, ஹார்ட்டின் வரைந்து, ஐஸ்வர்யா லட்சுமி, தனது காதலை உறுதிப்படுத்தியுள்ளதாக  சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். 

கடந்த 2017ல் தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கிய ஐஸ்வர்யா லட்சுமி, 'மாயநதி', 'வரதன்', 'காணக்காணே' உள்ளிட்ட மலையாளப் படங்களின்   மூலமாக ரசிகர்களிடையே மிகச் சிறந்த வரவேற்பைப் பெற்றார். விமர்சன ரீதியாகவும் இந்த படங்கள் அவருக்கு நல்ல பெயரைப் பெற்று தந்தன. அதன் பின்னர், தமிழில் 'ஆக்ஷன்' 'ஜகமே தந்திரம்' 'கார்கி' படங்களில் தன் நடிப்பாற்றலை வெளிப்படுத்தினார்.

Aishwarya

பொன்னியின் செல்வன் 1, கட்டா குஸ்தி, அம்மு, கார்கி மற்றும் அர்ச்சனா 31 நாட் அவுட் உட்பட 9 படங்களுடன் கடந்த ஆண்டில் ஒரு அற்புதமான வெற்றியைப் பெற்றுள்ளார். அவர் ஒரு திறமையான நடிகை, அவர் சினிமா தயாரிப்பிலும் இறங்கியுள்ளார். உண்மையில், அவர் கார்கியின் தயாரிப்பாளர்களில் ஒருவர்.

இந்நிலையில், ஐஸ்வர்யா லக்ஷ்மி ‘கைதி’, ‘மாஸ்டர்’ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்த நடிகர் அர்ஜுன் தாஸுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை ‘இதய’ குறியீடுடன் பகிர்ந்துள்ளார். இதனால் , இருவரின் ரசிகர்களும் ‘காதலுக்கு வாழ்த்துக்கள்’ என கருத்து பதிவிட்டு வருகிறார்கள். ஐஸ்வர்யா லக்ஷ்மி தனது அறிவிப்பால் பல ரசிகர்களின் இதயங்களை உடைத்து உள்ளார்.

இருவருக்கும் 2023-ல் படங்கள் உள்ளன. மலையாளத்தில் வெற்றி பெற்ற அங்கமாலி டைரீஸ் படத்தின் இந்தி ரீமேக் மூலம் அர்ஜுன் தாஸ் இந்தியில் அறிமுகமாகிறார். அன்வர் ரஷீத்தின் ஒரு மலையாளப் படத்திலும் வேலை செய்து வருகிறார். ஐஸ்வர்யா லட்சுமிக்கு துல்கர் சல்மானுடன் கிங் ஆப் கோதா மற்றும் பொன்னியின் செல்வன் 2 உள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!

From around the web