நடிகை சமந்தா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

 
சமந்தா

 

தமிழில் மட்டுமல்ல தெலுங்கு மற்றும் பாலிவுட்டிலும் முண்ணனி கதாநாயகியாக நடித்து வருபவர் நடிகை சமந்தா. இவர் சமீபத்தில்  மையோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக சமந்தா சமூக வலைதளங்களில் செய்தி வெளியிட்டிருந்தார். இதற்கான சிகிச்சைக்காக நடிகை சமந்தா ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நீண்ட காலமாக சமந்தாவை சோஷியல் மீடியாவில் சந்திக்காமல் சோர்வுடன் இருந்ததால் ரசிகர்கள் பெரும் கவலை கொண்டனர். ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க  சமூக வலைதளங்களுக்கு சமந்தா பேட்டி அளித்தார்.

சமந்தா

அதில் சமந்தா தன்னுடைய சிகிச்சை பற்றியும் அதில் இருக்கும் சிரமங்கள் பற்றியும் கண்ணீருடன் தெரிவித்திருந்தார் . விரைவில் குணமடைய ரசிகர்கள் வாழ்த்துக்கள் கூறினர். 
இந்நிலையில் சமந்தாவின் உடல் நிலையில் எந்த விதமான முன்னேற்றமும் ஏற்படாததால் மீண்டும் ர் தற்போது ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  நோயின் பாதிப்பு அதிகமாக இருந்ததால்தான் சமந்தா அடிக்கடி மருத்துவரிடம் செல்ல வேண்டியிருந்தது. 

சமந்தா


அதன் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக குணமடைய ஆரம்பித்த சமந்தாவிடம் மருத்துவர்கள் முழு ஓய்வில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.  ஆனால் சமந்தா மன அழுத்தம் குறைய  நான் நடித்து தான் ஆக வேண்டும் என கூறிவிட்டு வழக்கமான பணிகளை தொடர்ந்தார். யசோதா திரைப்படத்தின் டப்பிங் வேலைகளில் ஈடுபட்டார். இதனால் அவருக்கு இருக்கும் பாதிப்பு தற்போது அதிகமாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மட்டுமல்ல திரையுலகமே கவலையில் ஆழ்ந்திருக்கிறது.இந்த பிரச்சனையில் இருந்து விரைவில் குணமடைய வேண்டும் என்று அனைவரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web