நடிகை ஸ்ரீப்ரியாவின் தாயார் காலமானார்! திரையுலகினர் அஞ்சலி! இன்று மாலை இறுதி ஊர்வலம்!

பிரபல நடிகை ஸ்ரீப்ரியாவின் தாயார் நேற்று வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இறுதி ஊர்வலம் இன்று மாலை நடைப்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
1974ல் 'முருகன் காட்டிய வழி' படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ஸ்ரீபிரியா, அதன் பின்னர் தமிழில் மட்டுமே சுமார் 200க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.
தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் ஸ்ரீப்ரியா நடித்துள்ளார். இயக்குனர், தயாரிப்பாளர், டப்பிங் கலைஞர், சின்னத்திரை தயாரிப்பாளர் என திரைத்துறையின் பல தளங்களிலும் இயங்கி வரும் ஸ்ரீப்ரியா, மக்கள் நீதி மையம் கட்சியிலும் முக்கிய பொறுப்பை வகித்து வருகிறார்.
இந்நிலையில் இவரது தாயார் கிரிஜா பக்கிரி சாமி (81), வயது மூப்பு காரணமாக நேற்று, மயிலாப்பூரில் உள்ள தன்னுடைய வீட்டில் காலமானார்.
பிரபல பரத கலைஞரான குரு காரைக்கால் நடேசன் பக்கிரிசாமி பிள்ளையின் மனைவி கிரிஜா என்பது குறிப்பிடத்தக்கது. கிரிஜா பக்கிரிசாமி 'காதோடு தான் நான் பேசுவேன்' என்ற படத்தையும் இயக்கியுள்ளார். அதே போல் நீயா, நட்சத்திரம், போன்ற படங்களை மகளுடன் சேர்ந்து தயாரித்தும் உள்ளார். இவருக்கு நடிகை ஸ்ரீபிரியாவை தவிர ஸ்ரீகாந்த் என்கிற மகன் ஒருவரும் உள்ளார். இவருடைய இறுதிச் சடங்குகள் இன்று மாலை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!