பங்குச் சந்தைகளை ஆட்டம் காண வைத்த அதானி குழுமம்! ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை உண்மையா?

 
அதானி சரிவு ஷேர்

அதானி குழுமத்தின் பங்குகளில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியானது இரண்டு நாட்களில் முதலீட்டாளர்களின் போர்ட்ஃபோலியோக்களில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. இதில் நாட்டின் மிகப்பெரிய நிறுவன முதலீட்டாளரான லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (LIC) பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களில் ஒன்றாகும் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் . அதானி குழுமப் பங்குகளில் எல்ஐசியின் கூட்டு முதலீடு ஜனவரி 24, 2023 அன்று ரூபாய் 81,268 கோடியிலிருந்து ஜனவரி 27, 2023 அன்று ரூபாய் 62,621 கோடியாக சரிந்தது, கிட்டத்தட்ட ரூபாய் 18,647 கோடி நஷ்டத்தைக் சந்தித்திருக்கிறது.

அதானி எண்டர்பிரைசஸ், அதானி கிரீன் எனர்ஜி, அதானி போர்ட்ஸ், அதானி டோட்டல் கேஸ், அதானி டிரான்ஸ்மிஷன் மற்றும் சமீபத்தில் வாங்கிய சிமென்ட் நிறுவனமான அம்புஜா சிமெண்ட்ஸ் மற்றும் ஏ.சி.சி ஆகியவற்றில் டிசம்பர் 31, 2022 வரை எல்ஐசி 1 சதவீத பங்குகளை வைத்திருப்பதாக ஏஸ் ஈக்விட்டியில் உள்ள தரவுகள் காட்டுகிறது. இவற்றின் பங்குகள் கடந்த இரண்டு வர்த்தக அமர்வுகளில் நிறுவனங்கள் 19 சதவீதம் முதல் 27 சதவீதம் வரை சரிந்தன. கடந்த சில ஆண்டுகளாக இந்திய நிறுவனமானது பங்குக் கையாளுதல் மற்றும் கணக்கு மோசடி திட்டத்தில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை கூறியதை அடுத்து, அதானி குழுமத்தின் பங்குகள் அழுத்தத்திற்கு உள்ளாகின என்பது குறிப்பிடத்தக்கது.

ஹிண்டன்பெர்க்

இதற்கிடையில், அதானி குழுமத்தின் சி.எஃப்.ஓ, ஜுகேஷிந்தர் சிங் ஒரு ஊடக அறிக்கையில், "இந்த அறிக்கையானது இந்தியாவின் உயர் நீதிமன்றங்களால் சோதிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட தவறான தகவல் மற்றும் பழமையான, ஆதாரமற்ற மற்றும் மதிப்பிழந்த குற்றச்சாட்டுகளின் தீங்கிழைக்கும் கலவையாகும்." இந்தியாவில் இதுவரை இல்லாத மிகப்பெரிய எஃப்.பி.ஓ (FPO) நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸின் வரவிருக்கும் பொதுப் பங்களிப்பை சேதப்படுத்தும் முக்கிய நோக்கத்துடன் அதானி குழுமத்தின் நற்பெயரைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வெட்கக் கேடான, மோசமான நோக்கத்தை அறிக்கை வெளியிடும் நேரம் தெளிவாகக் காட்டிக் கொடுக்கிறது என்று  கூறியிருக்கிறார். அதானி எண்டர்பிரைசஸின் ரூபாய் 20,000 கோடி FPO ஜனவரி 27அன்று சந்தாவிற்கு வந்தது.

எல்.ஐ.சி

ஜனவரி 24 முதல் அதானி டோட்டல் கேஸில் எல்.ஐ.சி.யின் மொத்த முதலீடு ரூபாய் 6,237 கோடி குறைந்துள்ளது. அதைத் தொடர்ந்து அதானி எண்டர்பிரைசஸ் (3,279 கோடி குறைவு), அதானி போர்ட்ஸ் (ரூ. 3,205 கோடி), அதானி டிரான்ஸ்மிஷன் (ரூ. 3,036 கோடி குறைந்தது. ), அம்புஜா சிமெண்ட்ஸ் (ரூ. 1,474 கோடி), அதானி கிரீன் எனர்ஜி (ரூ. 871 கோடி) மற்றும் ஏ.சி.சி (ரூ. 544 கோடி குறைவு).

இது குறித்து நரேந்திர சோலங்கி, ஹெட்-ஈக்விட்டி ரிசர்ச், ஆனந்த் ரதி ஷேர்ஸ் & ஸ்டாக் ப்ரோக்கர்ஸ் பிசினஸ் டுடே டிவிக்கு அளித்த பேட்டியில்  முதலீட்டாளர்கள் கூடுதல் தெளிவுக்காக காத்திருந்து பிரச்சினை தீர்ந்தபின் நல்ல முடிவை எடுக்கட்டும் என்று கூறினார். அதன்பிறகு, புதிய தகவல்களின் அடிப்படையில் அதானி குழும பங்குகளை ஒருவர் போஃர்ட்போலியோவில் சேர்க்க பார்க்கலாம். என்கிறார்.

எல்.ஐ.சி

மொத்தத்தில், 10-பட்டியலிடப்பட்ட அதானி குழும நிறுவனங்களின் பத்து நிறுவனங்களின் சந்தை மூலதனம் ஜனவரி 24, 2023 அன்று ரூபாய் 19 லட்சம் கோடியிலிருந்து ஜனவரி 27 அன்று சுமார் ரூபாய் 4 லட்சம் கோடியாக கிட்டத்தட்ட ரூ.15 லட்சம் கோடிசரிந்துள்ளது. இதற்கிடையில், இந்திய பங்குச்சந்தை இன்டெக்ஸ் பி.எஸ்.இ சென்செக்ஸும் 1,647 புள்ளிகளை எட்டியது. அல்லது 2.70 சதவீதம், 59,330.90 ஆக வர்த்தகத்தை நிறைவு செய்திருக்கிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

From around the web