குழந்தை பெத்துக்க கூடுதல் மானியம் !! அதிரடி அறிவிப்பு!!

 
குழந்தை

உலகம் முழுவதும் மக்கள் தொகை பெருக்கம் 800கோடியை தாண்டிவிட்டது. இதனை கட்டுப்படுத்த மற்ற உலக நாடுகள் யோசித்து திட்டம் தீட்டி வரும் வேளையில் ஜப்பான் நாடு மக்கள் தொகையை அதிகரிக்க ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. அங்கு பிறப்பு விகிதம் குறைந்துள்ளதாகவும் இதனை அதிகரிக்க வேண்டும் என முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

குழந்தை

கொரோனா ஊரடங்கு நடவடிக்கைகளுக்கு பிறகு பிறப்பு விகிதம் குறைந்துள்ளதாக ஜப்பான் டுடேயின் ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது. ஜப்பானை பொறுத்தவரை குழந்தைப்பிறப்பு மற்றும் வளர்ப்பிற்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த மானியத் தொகை உயர்த்தி வழங்கப்படும் என ஜப்பான் சுகாதாரம், தொழிலாளர் மற்றும் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி  குழந்தை பிறந்த பிறகு புதிய பெற்றோருக்கு 420,000 யென் அதாவது ரூ. 2,52,338 பிரசவம் மற்றும் குழந்தை பராமரிப்பு செலவிற்கு மானியமாக வழங்கி வருகிறது. இதனை மேலும் உயர்த்தி வழங்க அமைச்சரவை முடிவு செய்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

குழந்தை

அதன்படி  இந்த தொகையை 500,000 யென்களாக அதாவது ரூ. 3,00,402 ஆக  உயர்த்தி வழங்கப்படும்  சுகாதார, தொழிலாளர் மற்றும் நலத்துறை அமைச்சர்   தெரிவித்துள்ளார்.
ஜப்பான் டுடே விடுத்த அறிக்கையின் படி  ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுடன் இந்த திட்டம் குறித்து மேற்கொண்ட ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு 2023 நிதியாண்டில்  நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web