அடேங்கப்பா.. 1000 காளைகள்.. ஆரவாரத்துடன் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு துவங்கியது!

 
ஜல்லிக்கட்டு

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 8  மணியளவில் துவங்கியது. பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் பிரபலம். வெளிநாடுகளில் இருந்தும் பார்வையாளர்கள் ஆர்வமுடன் இந்த போட்டிகளைக் காண வருகிறார்கள். தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைப்பெற்றாலும், மதுரை மாவட்டத்தில் நடைப்பெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்னும் விசேஷம். 

ஜல்லிக்கட்டு
மதுரை அவனியாபுரத்த்தை அடுத்து, பாலமேட்டிலும் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்நிலையில், உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை துவங்கியது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியைசைத்து அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியைத் தொடங்கி வைத்தார்.

ஜல்லிக்கட்டு

சிலிர்த்துக் கொண்டு 1,000 காளைகள் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்கின்றன. இந்த காளைகளை அடக்க 300 வீரர்களும் களமிறங்க உள்ளனர். வெற்றி பெறும் காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் தங்கம், வெள்ளி நாணயங்கள், சில்வர் பாத்திரங்கள், சைக்கிள், கட்டில், பீரோ, மிக்ஸி, கிரைண்டர்  என ஏராளமான பரிசு பொருட்கள் வழங்கப்படவுள்ளன. 
இன்றைய போட்டியில் அதிக காளைகளை அடக்கும் சிறந்த வீரருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பாக ஒரு காரும், சிறப்பாக விளையாடி முதல் பரிசு பெறும் காளையின் உரிமையாளருக்கு அமைச்சர் உதயநிதி சார்பில் ஒரு காரும் பரிசாக வழங்கப்படவுள்ளன.

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? எந்த வியாபாரம் உங்களுக்கு லாபம் தரும்!?

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்

From around the web