திருச்சியில் தேசிய பசுமை படை மாணவர்களின் காற்று மாசுபாடு விழிப்புணர்வு பேரணி!!

 
ஆர்பாட்டம்

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி புத்தூர் பிஷப் ஹீபர் பள்ளியில் தேசிய பசுமை படை மாணவர்களின் காற்று மாசுபாடு விழிப்புணர்வு பேரணி மாண்புமிகு மேயர் மு. அன்பழகன் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்  அரசு சுற்றுச்சூழல் துறை திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, தேசிய மாசு கட்டுப்பாட்டு வாரியம்,  மாவட்ட கல்வித்துறை, தேசிய பசுமை படை இணைந்து நடத்தும் மாணவ மாணவிகளின் காற்று மாசுபாடு விழிப்புணர்வு பேரணி இன்று(புதன்கிழமை) திருச்சி புத்தூர் பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.  

ஆர்பாட்டம்
மாநகராட்சி மாண்புமிகு மேயர் மு. அன்பழகன், உதவி ஆணையர்  நிவேதா ஆகியோர் பேரணியை தொடங்கி வைத்தனர். மாவட்ட கல்வி அலுவலர் செல்வி, தனியார் பள்ளிகள் கல்வி அலுவலர் என். விஜயேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்பாட்டம்
திருச்சி ஆர்.சி. மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் அந்தோணி லூயிஸ் வரவேற்றார். இதில் பள்ளியின் தலைமை ஆசிரியர் எஸ். அகஸ்டின் பொன்னையா, திருச்சி மாநகராட்சி இடைநிலை பொறியாளர் ரவிச்சந்திரன், தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் சகாயராஜ் கருத்துரை வழங்கினர். முடிவில் புத்தூர் பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் ஜெயராஜ் நன்றி கூறினார். இந்தப் பேரணி பிஷப் ஹீபர் பள்ளியில் தொடங்கி வெஸ்ட்ரி பள்ளியில் நிறைவடைந்தது. அதைத் தொடர்ந்து பேரணியை ஜான் 
வெஸ்டுரி ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சைமன் சுகுமார் நிறைவு செய்து வைத்தார்.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web